×

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 250 பேர் மீது வழக்குப்பதிவு

 

நாகப்பட்டினம்,நவ.5: ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகப்பட்டினத்தில் எஸ்பி ஹர்ஷ்சிங் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாகன விபத்தினால் ஏற்படும் அதிகளவில்
உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் எஸ்பி ஹர்ஷ்சிங், நாகப்பட்டினம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போக்குவரத்து காவலர்கள் நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோடு ஏழைப்பிள்ளையார் கோயில் பிரிவு சாலையில் நேற்று இரண்டு சக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்து வந்தனர். மேலும் உரிமம் இல்லாமல் வந்த வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த எஸ்பி ஹர்ஷ்சிங் திடீரென தனது வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி 250 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

The post ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 250 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,SP ,Harsh Singh ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...